அலி சப்ரி – சமந்தா பவருக்கு இடையில் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் சமந்தா பவரைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

வொஷிங்டனில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து எதிர்காலத்தில் வழங்க வேண்டிய நிவாரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கனின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர், அந்நாட்டு செனட்டர் பில் ஹாகெர்டியையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply