பிரேசிலில் கன மழை – 17 நகரங்களில் அவசரநிலை பிரகடனம்

பிரேசிலில்  பெய்து வரும் கன மழையால் 17 நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வெள்ளம் பாதித்த பகுதியில் வீட்டின் மேல்தளத்தில் சிக்கித் தவித்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதேநேரம், தெற்கு பிரேசில் பாரானா மாகாணம் போலாரது என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த நேரம் 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த பாதையில் சென்றுகொண்டிருந்த நிலையில், நிலச்சரிவில் அந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அந்த வாகனங்களில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply