கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் இசைச் சங்கமத்தின் இறுதிப் போட்டி!

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இசைச் சங்கமத்தின் இறுதிப் போட்டி  நேற்றையதினம்(01)  காலை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்ரமணியம் பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக ஓய்வுநிலை சங்கீதத் துறை ஆசிரியர் சிவகுமார் சக்திதேவி கலந்துகொண்டார்.

இசைச் சங்கமத்தின் இறுதிப் போட்டியானது கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர்களான விக்னேஸ்வரி நரேந்திரா , மகாலிங்கம் நிரேஸ்குமார் ஆகியோரின் ஒழுங்கமைக்கப்பில் நடைபெற்றது.

குறித்த இசைச் சங்கமத்தின் இறுதிப் போட்டியாளர்களாக   கல்லூரியின் ஆசிரிய மாணவர்களான சஜிந்தா ஏகாநந்தன் , றொசான் றொபின், உஜேனிதா தங்கமாணிக்கம், கவிதாஞ்சலி ஜீவா ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.

இந் நிகழ்வில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், ஆசிரிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply