ஹட்டனில் பத்தாம் ஆண்டு மாணவன் O/L தேர்வில் 9A!!

ஹட்டன் ஸ்ரீபாத தேசிய கல்லூரியில் இருந்து விலகி, கடந்த வருடம் நடைபெற்ற கல்வி பொது தராதர பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒன்பது பாடங்களிலும் A (9A) சித்தி பெற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.

இம்மாணவன் தரம் பத்தில் கல்வி கற்கும் போதே பாடசாலையில் இருந்து இடை விலகி குறித்த பரீட்சையில் தோற்றியுள்ளார்.

ஹட்டன் வில்பிரேட் பிரதேசத்தில் வசிக்கும் பொரள லியனகே உஜித சித்மால் இரஞ்சின், எனும் மாணவனே இந்த சாதனையை புரிந்துள்ளார்.

ஆஸ்திரேலியா நாட்டில் எட்டு வருடங்கள் கல்வி கற்று 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த மாணவன் கினிகத்தேன மத்திய மகா வித்தியாலத்தில் புலமை பரீட்சையில் 169 புள்ளிகளை பெற்று சித்தி அடைந்தவராவார்.

பின்னர் இம்மானவன் தரம் 9க்காக ஹட்டன் ஸ்ரீபாத தேசிய கல்லூரியில் சேர்ந்துள்ளார். பின்னர் 2021 ஆம் ஆண்டு பரீட்சை நடைபெறுவதற்கு முன்னர் பாடசாலையிலிருந்து விலகி  2021 ஆம் ஆண்டு சாதாரண பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சார்த்தியாக தோற்றறயே இந்த சாதனையை புரிந்துள்ளார்.

மேலும் உயர்தர பரிட்சைக்கும் தோற்ற தயாராகி வருவதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply