
டயகமவில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று, இன்று காலை 06.40 மணியளவில் கௌலஹேனா பகுதியில் மண் வாங்கியில் சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து ஏற்பட்டுள்ள போதிலும், பேரூந்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்பேருந்து விபத்தின் காரணமாக பணிக்கு செல்லும் பயணிகள் பலரும் நேர தாமதத்தினால் சிரமத்திற்க்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் குறித்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.