பொலிஸ் நிலையத்தில் வைத்து பெண் கான்ஸ்டபிள் வன்புணர்வு – இராணுவச் சிப்பாய் கைது!

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் 27 வயதுடைய இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்துக்கு வந்த இருவர் தன்னிடம் பல ஆபாச வார்த்தைகளைக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் முறைப்பாடு செய்துள்ளார் .

அந்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் இராணுவச் சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் விசாரணைகளின் பின்னர் மாவனெல்ல நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இராணுவச் சிப்பாயுடன் சேர்ந்து பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைப் பாலியல் பலாத்காரம் செய்த மற்றைய நபரைத் தேடிப் பொலிஸார் வலை வீசியுள்ளனர்.

Leave a Reply