உலகில் மிகவும் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பு!

உலகில் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பு நகரமும் இடம்பெற்றுள்ளது.

லண்டனைச் சேர்ந்த பொருளாதார புலனாய்வு பிரிவு (Economist Intelligence Unit) என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

அந்த அமைப்பின் பட்டியலில் இந்தாண்டுக்கான உலகின் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த முதல் பத்து நகரங்களில் கொழும்பு இடம்பெற்றுள்ளது.

அதேசமயம் இந்த தரவரிசையில் 161 வது இடத்தில் கொழும்பு இந்தியாவின் பெங்களூருவுடன் இணைந்துள்ளது. அத்துடன் இந்தியாவின் சென்னை மற்றும் அஹமதாபாத் மற்றும் பாகிஸ்தானின் கராச்சிக்கு மேலே தரவரிசையில் உள்ளது.

மேலும் உலகளாவிய டமஸ்கஸ், திரிபோலி மற்றும் தெஹ்ரான் ஆகியவை மிகவும் செலவு குறைவான நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது அந்தந்த நாடுகளின் பலவீனமான பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை பிரதிபலிக்கிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *