யானை – மனித மோதலுக்கு தீர்வாக பாரிய குழி தோண்டும் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (2) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
யானை மனித மோதலுக்கான தீர்வாக குழி தோண்டுவதற்கு அம்பாறையைச் சேர்ந்த ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் யோசனை முன்வைத்துள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
10 அடி அகலமும் 10 அடி ஆழமும் கொண்ட அகழியை தோண்டுவது நாட்டின் நதி அமைப்புகளுக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என பொன்சேகா எச்சரித்துள்ளார்.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் இத்திட்டத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக அனுமதி வழங்காவிட்டாலும், 55 கிலோமீற்றர் நீளத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவரது கருத்துக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தன