வீ.கே வெள்ளையன் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக, தலைவர். ‘தொழிற்சங்க துறவி’ என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகின்ற வி.கே வெள்ளையனின் 51ஆவது நினைவு தினம் நேற்று டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நினைவு அஞ்சலியில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் தலைமை பணிமனையில் வி.கே.வெள்ளையன் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளும் தொடர்ந்து, டிக்கோவாவில் அமைந்துள்ள வெள்ளையன் நினைவு ஸ்தூபிக்கு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான பலன் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கு அமைய, தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதி செயலாளர் சோ.ஸ்ரீதரன் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடந்தது.

குறித்த அஞ்சலியில் சோ.ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் உட்பட சங்கத்தின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்புடன் நடத்தினர்.

Leave a Reply