கிழக்கில் தேசிய இளைஞர் படையணியினர் கௌரவிப்பு!!

வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற தலைமைத்துவ பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணியின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது

குறித்த இளைஞர் படையணிக்கு பொறுப்பான மேஜர் கே.எம்.தமீம் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (01) குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணக்கியல் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.சி.ஏ.நாசர், கௌரவ அதிதியாக தியத்தலாவை இராணுவ  படையணியின் லெப்டினன் கேணல் எம்.எச்.எம். ரஊப்,ஏனைய அதிதிகளாக படையணியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply