இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்

நவம்பர் மாதத்தில் மொத்தம் 59,759 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இலங்கை இந்த வருடம் 628,017 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது.

இந்தாண்டு மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

மார்ச் மாதத்தில் 106,500 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.பின்னர் பொருளாதார நெருக்கடி, எதிர்ப்புகள் மற்றும் பாரம்பரிய பயணிகளுக்கு விடுமுறை காலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது.

கடந்த சில மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மற்றும் ஐரோப்பாவில் குளிர்காலம்; சுற்றுலா அமைச்சு மேற்கத்திய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான வருகையை எதிர்பார்க்கிறது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் ஆண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத் துறையானது மூன்று கடினமான வருடங்களைத் தொடர்ந்து படிப்படியாக முன்னேறி வருகிறது.

Leave a Reply