கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு: இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று(03) சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் மற்றும் இணுவில் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 30 வயது மதிக்கத்தக்கவர்களே வாள்வெட்டுக்கு இலக்காகினர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply