தமிழ் போக்கு கூட்டணிக்கு புதிய செயலாளர்!

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கான புதிய செயலாளரை விரைவில் நியமிக்குமாறு மலையக மக்கள் முன்னணி கூட்டணியின் அரசியல் உயர் பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச் செயலாளராக செயல்பட்ட சந்திரா சாப்டர்,  தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.

எனினும் புதிய பொது செயலாளர் இன்னமும் முறையாக நியமிக்கப்படவில்லை.

முற்போக்கு கூட்டணியின் ஸ்தாபக செயலாளரான மலையக மக்கள் முன்னணியில் உறுப்பினர் லோரன்ஸ் செயல்பட்டார்.

எனவே புதிய பொது செயலாளர் பதவியை மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய பொது செயலாளர் பேராசிரியர் ஜெயச்சந்திரனுக்கு வழங்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் புதிய செயலாளரை நியமிக்குமாறு மலையக மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply