இலங்கையின் தேயிலை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

கொழும்பு தேயிலை ஏலத்தில், ஏலத்தில் விடப்பட்ட தேயிலையின் அளவு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த வார ஏலத்தின் போது 4.2 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏலத்தில் விடப்பட்டதாக தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

முழுமையாக தேயிலை வகைகளுக்கு சிறந்த கேள்வி உள்ளதுடன், ஏலத்துக்கு தேவையான தேயிலை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு பீ.ஓ.பி மற்றும் பீ.ஓ.பி.எஃப் என்பவற்றின் விலைகள், கேள்விகள் நிலையாக காணப்படுவதுடன், நுவரெலிய தேயிலைக்கான விலைகள் மற்றும் கேள்வி ஒழுங்கற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், ஊவா மற்றும் உடபுஸ்ஸல்லாவ தேயிலை விலைகள் ஓரளவு நிலையான தன்மையை வெளிப்படுத்தியுள்ளன.

இதேவேளை, இந்தவாரம் கீழ்நாட்டுத் தேயிலை 1.8 மில்லியன் கிலோகிராம் ஏலத்தில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளமை விசேடமாகும்.

Leave a Reply