இலங்கையர்களுக்கு இனி அரிசியும் இல்லை!

அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, பெரும்போகத்தில்  சுமார் 07 இலட்சம் ஹெக்டேயரில் நெல் பயிரிடப்ப்ட்டுள்ளதாக பத்தலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது மொத்த பயிரிடல் நிலப்பரப்பில் 75 வீதம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply