எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை! முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

மேல்மாகாண முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக பதிவுக் கட்டணம் என்ற போர்வையில் மேலதிக பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பதிவுக் கட்டணத்தைச் செலுத்தாத முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு மேலதிகமாக ஐந்து லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று அதன் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகளின் பதிவு தொடர்பான தகவல்களை www.wptaxi.lk என்ற இணையத்தளத்தை அணுகி பெற்றுக்கொள்ளுமாறு மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், அங்கு பதிவு செய்வதற்காக தகவல்களை சமர்ப்பித்த முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு சாரதியின் கணக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கணக்கை செயல்படுத்த பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இணையதள முகவரியுடன் கூடிய குறுஞ்செய்தியின் ஊடாக இணையதளத்தை அணுகும் போது, ​​பதிவுக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுதில் ஜயருக் தெரிவித்தார்.

Leave a Reply