வெல்லம்பிட்டியவில் 4 பேர் கைது

வெல்லம்பிட்டிய சேதுவத்தையில் உள்ள களஞ்சியசாலையை உடைத்து 29 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேண்ட்பாஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து பல்வேறு திறன் கொண்ட 840 மின் விளக்குகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கிரேண்ட்பாஸ் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என தெரிவித்துள்ள கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply