சுன்னாகம் போலீஸ் பிரிவிற்குட்பட்ட, இணுவில் கிழக்குப் பகுதியில் இரண்டு வாள்களுடன் 38 வயதுடைய, இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் 51 ஆவது படைப்பிரிவின் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய, இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் சுன்னாக போலீசார் இணைந்து நடத்திய தேடுதலின் போது குறித்த சந்தேக நபர் இரண்டு கூரிய வாள்களுடன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகம் நம்பர் மேலதிக விசாரணைகளுக்காக சுண்ணாகம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக சுண்ணாக போலீசார் தெரிவித்துள்ளனர்.