சாவகச்சேரி பருத்தித்துறை வீதியில் பட்ட மரத்தின் கீழ் ஆபத்தான பயணம்!.

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட  பருத்தித்துறை வீதியில் மகளிர் கல்லூரிக்கு அண்மையாக பிரதான வீதியில் மரமொன்று பட்டு வீதியில் விழுகின்ற அபாய நிலையில் உள்ளது.  இதனால் குறித்த வீதியில் ஆபத்தான நிலையில் பயணிகள் செல்லக்கூடியதை அவதானிக்க கூடியதாக உள்ளது. 

இது தொடர்பாக  உரிய தரப்பிடம் அறிவித்தும் குறித்த வீதி மாகாண சபைக்குட்பட்டதென்றும் இது தொடர்பாக உள்ளூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கமுடியாதென்றும் குறித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் ஆபத்தான மரங்களால் பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply