மிர்புர்,டிச 04
வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே வங்காள தேச வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஷேகர் தவான் 7 ரன்னுடன் வெளியேற கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்னுக்கு அவுட்டானார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 9 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். ஷ்ரேயஸ் அய்யர் 24 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்னும் அடித்தார். தாக்குப் பிடித்து விளையாடிய கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார்.
இந்திய அணி 41.2 ஓவர் முடிவில் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வங்காளதேச அணி ஆரம்பத்தில் அதிக விக்கட்டுக்களை கொடுத்தாலும் இறுதியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வென்றமை குறிப்பிடத்தக்கது