தவறு செய்தது தனுஷ்க மட்டுமா? இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் புகைப்படங்களுடன் வெளியான தகவல்

20 க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற வீரர்களின் நடத்தை சம்பந்தமாக சாமிக்க கருணாரத்ன கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அணியின் பல வீரர்கள், அணியின் நிர்வாக கட்டுப்பாட்டை மீறி சென்ற விதம் சம்பந்தமான புகைப்படங்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.


இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத விக்ரமசிங்கவினால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சாமிக்க கருணாரத்னவை இலக்கு வைத்து எழுத்து மூலம் கடுமையான தாக்குதலை தொடுத்து வரும் அணியின் பல வீரர்கள், ஒழுக்கம் கட்டுப்பாடுகளை மீறி, போட்டிகளுக்கு இடையில் வெளியில் சுற்றித்திரிந்து, மோசமாக நடந்துக்கொண்ட சம்பவங்களுக்கு பின்னால், மதம் சார்ந்த குழு ஒன்று இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு காரணமாக மிகவும் சிக்கலான நிலைமை உருவாகியுள்ளது

இவர்கள் சாமிக்க கருணாரத்னவை இலக்கு வைத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதம் சமூக ஊடகங்களில் வெளியாகியமை சம்பந்தமாக கேள்விகள் எழுந்துள்ளன.

குசல் மெண்டிஸ், ஜெப்றி வென்டர்சே, வன்புணர்வு குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்படும் கடும் நிபந்தனைகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்க ஆகியோர் இரவு நேர களியாட்ட விடுதிகளில் யுவதிகளுடன் காணப்படும் பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் அவுஸ்திரேலியாவில் பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் திமுத் கருணாரத்னவும் இணைந்துக்கொண்டுள்ளார்.

இதனிடையே போட்டிகளுக்கு இடையில் வீடுகளை தேடும் வேலைத்திட்டம் ஒன்றில் ஈடுபட்டமை தொடர்பாக கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்கவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஒழுக்க விரோத செயல் தொடர்பில் அணியின் வீரர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், உலக கிண்ண போட்டிகளின் போது இலங்கை அணியின் வீரர்களின் நடத்தை சம்பந்தமாக ஆராய விசாரணை குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்தார்.

கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதியில் இருந்து நவம்பர் 13 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ICC T/20 உலக கிண்ண போட்டியில் கலந்துக்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் பங்களிப்பு மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜினி வீரவர்தன தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணை குழுவை நியமித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *