கிளிநொச்சி, டிச. 5:
கொழும்பிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த அதி சொகுசு பஸ் ஒன்று கிளிநொச்சி- இரணைமடு பகுதியில் இன்று (05) அதிகாலை 4.45 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதில், 22 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
குறித்த பஸ்ஸில் பயணித்த 22 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
முன்னதாக, கடந்த நவம்பர் 5 ஆம் திகதி யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியிருந்தனர்.
சொகுசு பேருந்துகள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.