_638d5cca70a8f.jpg)
இலங்கையில் மக்கள் எவரும் தேர்தலைக் கோரவில்லை! – எதிரணிக்கு அரசு பதிலடி
“இலங்கையில் மக்கள் எவரும் தேர்தலைக் கோரவில்லை. எனினும், உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.” – இவ்வாறு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
தேர்தலின் போது ஒவ்வொருவருடைய பலத்தையும் அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”மக்கள் தேர்தலைக் கோரவில்லை. எனினும், எதிர்க்கட்சியின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும். தேர்தலில் மக்கள் அவர்களுக்குச் சிறந்த பதிலை வழங்குவார்கள்” – என்றார்.