சிவபூமி அறக்கட்டளையினரால் யாழ்ப்பாணம் செம்மணி வாயிலில் ( A9 வீதி) பிரதிட்டை செய்யப்பட்டுள்ள 7அடி உயரமான கருங்கற் சிவலிங்கப்பெருமானுக்கு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று(05) மாலை இடம்பெற்றது.
அத்துடன் சிவலிங்கப் பெருமான் எழுந்தருளிய கோவிலுக்கு கலசம் வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் மற்றும் மதகுருமார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.