கல்வி கற்போம்! கற்பிப்போம்! எனும் தொனிப்பொருளில் அட்டன் கல்வி வலயம் சலன்கந்த பிரதேச பாடசாலைகளில் தரம் 05 இல் கல்விப்பயிலும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு 04/12/2022 தினத்தன்று நடைபெற்றது.
நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் ராமச்சந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கருத்தரங்கு ஒட்டரி தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் என்பீல்ட் , எட்லி, இன்வெரி ஒட்டரி தமிழ் வித்தியாலய மாணவர்கள் சுமார் 95 பேர் கலந்து கொண்டனர்.
குறித்த கருத்தரங்கிற்கு வளவாளராக ஆசிரியர் கிருஸ்ணகுமார் செயலாற்றினார், என்பதுடன் கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பிரதேச சபை உறுப்பினர் ராமச்சந்திரன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

