சுற்றுலா விசா மூலம் மலேசியாவில் வேலைக்காக ஆட்களை கடத்துவது தொடர்பான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கண்டுபிடித்துள்ளது.
அதன்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய பணியகம் மற்றும் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அந்த நடவடிக்கைகளின் கீழ், 23 பேர் சுற்றுலா விசா மூலம் மலேசியாவிற்கு வேலைக்காக செல்ல முயன்றதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த முதலாம் திகதி மலேசியாவிற்கு விஜயம் செய்து வந்த 14 பேர் கொண்ட இலங்கையர்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொண்ட சோதனையின் போது, அவர்களில் ஒன்பது பேர் சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு வேலைக்குச் செல்ல முயன்றுள்ளதாகவும் அதில் நான்கு பெண்களும், 5 ஆண்களும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.