சுகாதாரத்தை வைத்து அரசியல் செய்யும் மலையகம்!

அக்கரபத்தனை பிரதேசத்தில் நிலவுகின்ற சுகாதாரம் சம்பந்தமாக, சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதாரம் உத்தியோகத்தர்களையும் வரவழைத்து அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் ராமன் கோபால்  தலைமையில், பிரதேச சபை காரியாலயத்தில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.  

இதன்போது நகரங்கள், தோட்டங்கள், கிராமபுரங்கள், பாடசாலைகள், பொது இடங்கள் போன்றவற்றை மையபடுத்தியும்,  சிற்றுண்டிசாலைகள் கண்காணிப்பு செய்வது போன்றவை தொடர்பாகவும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. 

அதன் போதுராமன் கோபால் அவர்களின் கூற்றுப்படி,  பிரதேச சபை என்பது பிரதானமாக சுற்றுப்புற சூழலை பாதுகாப்பு செய்வதையே அடிப்படையாகக் கொண்டது.

இதில் சுகாதார பிரிவுக்கும் பாரிய போறுப்பு உள்ளது.

இதற்காக நாம் இனி வரும் காலங்களில் சிறப்பாக செயல்படவேண்டும்.

இதற்கு ஏதுவான அனைத்து விடயங்களையும் தான் செய்து தருவதாகவும் கூறினார். 

மேலும் அதற்கான தெளிவூட்டல்கள் முன்னெச்சரிக்கை நிபந்தனைகள், கால்நடைகள், திட்டமிடல்கள் செய்யகூடிய விடயங்களையும் மேற்கொள்ளபட வேண்டும்.

 எனவே எமது பகுதியை பாதுகாப்பு செய்ய வேண்டியவர்கள் நாமே,  இனி கூட்டாக ஒன்று சேர்ந்து தெளிவூட்டலுடன் ஒவ்வொரு இடங்களுக்கு சென்று கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதுடன். இதற்காக  அதிகாரிகள் அவர்களின் முழு  ஆதரவையும் எமக்கு தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *