வாங்கோ வாங்கோ – தமிழ்த் தலைவர்களை பேச்சுக்கு அழைக்கும் ரணில்

கடந்தகால மனக் கசப்புகளை பேசிக் கொண்டிருப்பதால் காலம்தான் வீண்விரயமாகும். வெளியாரின் தலையீடு இல்லாமல் நாம் ஒன்று கூடி பேச்சு மூலம் தீர்வை அடைவோம்.அதன் மீது  நம்பிக்கை வைத்து தமிழ் தலைவர்கள் செயற்பட வேண்டும். இவ்வாறு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை கூறியுள்ள்ளார்.

தமிழ் மக்களுக்கு பேச்சு மூலமான தீர்வு என்பது மாய காற்றாக மாறிக்கொண்டிருக்கும் கனவு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், இந்திய ஆங்கில  ஊடகம் ஒன்றுக்கு  தெரிவித்தார்.

நல்லாட்சி அரசின் காலத்தில் , கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியில் முழுமையாக நம்பி ஈடுபட்ட ஒருவர், இவ்வாறு  நம்பிக்கை இழந்து, கருத்தை வெளிப்படுத்தியுள்ள  சூழலில் உங்களின் முயற்சி எவ்வாறு உள்ளது என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காண நாம் தயாராக உள்ளோம். அதற்கு  முதற்கட்டமாக மக்கள் பிரதிநிதிகளை கொண்டுள்ள அனைத்து கட்சிகளுடனும் விரைவில் சந்திப்புக்களை நடாத்துவோம்.

இதில்  அனைத்துக்  கட்சிகளும்  பங்கேற்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.கடந்தகால கசப்பு விடயங்களை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் இல்லை. தேசியப்  பிரச்சினையை, வெளியாரின் தலையீடு இன்றி , நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி தீர்க்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *