பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சிப் புகைப்படங்கள் – பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்கும் நபர்கள்

மில்லனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லனிய வத்த மற்றும் பரகஸ்தோட்டை பிரதேசங்களில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து,போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்பட்ட ,பாடசாலை மாணவன் உட்பட நான்கு சந்தே நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவன் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் மற்றும் போதைப்பொருள் விநியோகித்த மாணவர் ஒருவருடன் நால்வரே இவ்வாறு  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

பதினெட்டு வயது பாடசாலை மாணவன் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவனுக்கு அவனது தாய் உறுதுணையாக இருந்தமை விசாரணிகளில் இருந்து  தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர்கள் மில்லனிய பொலிஸிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *