சர்வதேச விருதை வென்ற இலங்கையின் அழகான ஹோட்டல்

துருக்கியின் அன்டலியாவில் நடைபெற்ற 16வது உலக சொகுசு ஹோட்டல்களுக்கான  விருது வழங்கும் நிகழ்வில், ஆசியாவின் நம்பர் 1 சொகுசு மவுண்டன் ரிசார்ட்டாக UHE குழுமத்தின் துணை நிறுவனமான 98 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள  ரிசார்ட் & ஸ்பா தெரிவு செய்யப்பட்டுள்ளது.

 உலகில்  மிகவும் விரும்பப்படும், ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளுக்கு இணையாக, பிரத்யேக சேவை மற்றும் சலுகைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

எல்லாவிலில்  அமைந்துள்ள குறித்த சொகுசு ரிசார்ட் மற்றும் ஸ்பா, சர்வதேச பயணிகளின் ஆர்வத்தைத் ஈர்த்தமையால் உலகம் முழுவதும் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

UHE குழுமத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் எரந்த அபேரத்ன தெரிவிக்கையில், “ஆசியாவிலேயே நம்பர் ஒன் சொகுசு மவுண்டன் ரிசார்ட் என்ற விருதினைப் பெற்றதில் நாங்கள் பெருமையடைகிறோம். 2012 இல் 98 ஏக்கர் நிறுவப்பட்டபோது, ​​வர்த்தக நாமம் மற்றும் வழங்கல் மாத்திரமன்றி, இலங்கையின் பயண மற்றும் சுற்றுலாத் துறையில் உண்மையிலேயே பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பார்வை எமக்கு இருந்தது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *