சிங்கள மாணவர்களைக் காப்பாற்றிய யாழ்ப்பாண இளைஞன் – குவியும் பாராட்டுக்கள்

நேற்று  காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை நபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

 நேற்று மாலை 5.30 மணியவில் ,யாழ் பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் ,கொழும்புத்துறைக்கு செல்லும் பேருந்தை எதிர் பார்த்து நடந்து சென்று கொண்டிருந்தேன்.

குறித்த பாதையில் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என்று நினைக்கின்றேன். நான்கு இளைஞர்கள் குடி போதையில் இருந்துகொண்டு,  பெண்கள்   மற்றும் ஆண்கள் 9மாணவர்கள்) என பாரபட்சம் இன்றி, அடிக்கவும் அசிங்கபடுத்தவும் செய்தனர்.

இதனை அவதானித்த யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த  இளைஞர் ஒருவர், உடனடியாக பாதிக்கப்பட்ட  நபர்களை  அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்  சென்று பொலிஸாரிடம் சம்பவம் தொடர்பில் தெரிவித்தனர்.

 இவர்கள் யார் என்று தெரியாது.சுமார்  15 நிமிடமாக தம்மை பின் தொடர்வதாகவும், அசிங்கமாகவும் பேசுவதாக தெரிவித்தனர் குறித்த முறைப்பாட்டில் அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்ற  பொலிஸார் குடி போதையில் இருந்த இருவரை  பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்  சென்றனர். பாதிப்புக்கு உள்ளன சகோதர மொழி பேசும் உறவுகளையும் பாதுக்காப்பாக அனுப்பி வைத்தனர் என பதிவிட்டுள்ளார்.

குறித்த யாழ் இளைஞனின் துணிச்சலான செயற்பாட்டால் , சிங்கள மொழி  பேசும் மாணவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.இவ்வாறான சேட்டைகள் பல நாட்களாக தொடர்ச்சியாக குறித்த பகுதியில் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *