வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமாறு கோரி மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டத்தினை வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ” மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய், சுகாதார உரிமை எங்கள் உரிமை உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கருத்து தெரிவிக்கையில்,
வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.வழியில் உள்ள மருந்தகங்களுக்கு சென்று மருந்துகளைப் பெறுமாறு துண்டுகளை எழுதி தருகின்றார்கள். மருந்தங்களுக்கு சென்றாலும் அங்கு மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.
அவசர நோய்களுக்கு கூட மருந்துகளை பெற முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகிறார்கள். இது விடயத்தில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர் .