இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, தனது பதவி விலகல் தொடர்பில் இதுவரையில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலமே தமக்கு இது தெரியவந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் சபை, தலைவர் மற்றும் உறுப்புரிமை ஆகியவற்றிலிருந்து விலகுமாறு கிங்ஸ்லி ரணவக்கவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளதாக அமைச்சு நேற்று பிற்பகல் அறிவித்தது.
மகும்புர பல்நோக்கு நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்க ஆரம்பிக்கப்பட்ட “சிட்டி பஸ்” சேவை அரசாங்க கொள்கை தீர்மானத்தின் பிரகாரம் தமக்கு அறிவிக்காமல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கிங்ஸ்லி ரணவக்கவின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இப்போது நேரம் இரவு 11.48 மணி. ஒரு குடிமகனாக, நான் இதுபோன்ற நிறுவனத்தில் பணிபுரியும் போது, நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். பதவி நீக்கம் செய்யும் அளவுக்கு நான் தவறு செய்திருந்தால், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு செல்ல தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.