இலங்கையில் சிறைக்குள் பெண் ஒருவரின் ஆடைகளை கழற்றி,கரண்ட் சாக் கொடுத்து கொடூரச் சோதனை ?

நிதி மோசடி சம்பந்தமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ நிறுவனத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலிக்கு, சிறைக்குள் மனிதாபிமானமற்ற வகையில் நடத்தப்படுவதாக தெரிவித்து  மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திலினி பிரியமாலி சார்பில் அவரது சட்டத்தரணி மஞ்சு ஸ்ரீ சந்திரசேன இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். திலினி பிரியமாலிக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் துன்புறுத்துவதாக  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலினி பிரியமாலி தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்குள் நேற்றிரவு சென்ற அதிகாரிகள் பரிசோதனைகளை நடத்திய போது அவர் இரவு அணிந்திருந்த ஆடையை உயர்த்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

ஆடையை அவிழ்த்து சோதனையிட்டுள்ளனர். பிறப்புறுப்பை சோதனையிட்டுள்ளதுடன் அவருக்கு  அதில் காயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் பிரியமாலியின் பிறப்புறுப்பு மற்றும் உடலையும் சோதனையிடும் போது மின் பந்தத்தை கொண்டு சோதனை செய்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சோதனை நடத்தும் நேரங்களில் பிரியமாலியின் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள பெண் சிறை அதிகாரி அங்கிருந்து வெளியேற்றப்படுவதாகவும் ஆறு பெண் அதிகாரிகள் சுற்றிவளைத்துக்கொண்டு பரிசோதனை நடத்துவதாகவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இதன் போது அந்த அதிகாரிகளே அலைபேசி அல்லது சிம் அட்டையை வைத்துவிட்டு குற்றச்சாட்டை சுமத்தும் ஆபத்தும் இருப்பதாகவும் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply