தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை – மத்திய அரசு

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில், இதுவரை உத்தியோகப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
இந்நிலையில், இது குறித்து மக்களவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி எழுப்பப்பட்டது.

குறித்த கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் வழங்கிய மத்திய உள்துறை அமைச்சர் தமிழகத்தை பிரிக்கும் எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்த பிரச்சினைக்கு முடிவுக்கு வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply