பதுளையில் அதிகரிக்கும் கசிப்பு உற்பத்தி!

பதுளை, பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்டப் மேற்பிரிவில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் எல்டப் மேற்பிரிவிற்கு விரைந்து சந்தேகத்திற்கு இடமான வீட்டினை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது வீட்டினுள் கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டிருந்த 15600 மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதோடு 44 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு குறித்த சந்தேக நபருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (08/12) பசறை நீதிவான் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *