கொகரெல்ல – வேகம பிரதேசத்தில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர், விஷம் அருந்தி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.
49 வயதுடைய பெண்ணொருவரும், 46 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இருவரும் சுமார் 17 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் வெளிநாட்டில் இருந்து டிசம்பர் 4 ஆம் திகதி வேகம கொகரெல்லவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய நிலையில், டிசம்பர் 6 ஆம் திகதி அவரது கணவர் அந்த வீட்டிற்கு வந்து கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனரர்.
சந்தேகநபரும் அதே வீட்டிற்கு அருகில் விஷம் அருந்தி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்