இலங்கையில் ஒரு சோடி செருப்பு 14000 ரூபா – அதிர்ச்சியில் மக்கள்

நாட்டின் பொருளாதாரம் கீழ் மட்டத்தில் காணப்படும் நிலையில்.அனைத்துப் பொருட்களின் விலைகளும் பல மடங்கு சடுதியாக அதிகரித்துள்ளது.சாதாரண மக்கள் ஒரு வேளை உணவுக்கே அல்லல் படுகின்றனர்.

இந்த நிலையில் ஆடம்பர பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது.இலங்கை முழுவதும் கிளைகளை கொண்ட தனியார் விற்பனை நிறுவனம் ஒன்றில் உயர் தரத்திலான (High Level Brand ) செருப்பு ஒன்று இணையத்தில் விற்பனைக்காக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

இதன் விலை 13950 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.நாடு இருக்கும் நிலையில் இப்படி ஒரு செருப்பு அணிய வேண்டுமா ,காசு எம்மிடம் இல்லையென சமூக வலைத்தளங்களில் பலர் புலம்பி வருகின்றனர்.என்றாலும் சில Brand உற்பத்திகள் உலகளாவிய  ரீதியில் அதன் பெயர் நாமத்துக்காக அதிக விலையில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *