யாழில் இன்று இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் சமூக விஞ்ஞான படிப்பு வட்டத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சமூக நெருக்கடிகளும் போதைக் கலாசாரமும் எனும் கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் கலை இலக்கியப் பேரவையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில்  யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா மற்றும் அருட்தந்தை வின்சன்ட் பற்றிக் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

  நிகழ்வில், போதைப் பொருள் பாவனை விடயத்தில் இலங்கை மற்றும் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலை மற்றும் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

மேலும் மாணவ மட்டத்தில் போதைப்பொருள் பாவனை ஊடுருவாமல் இருப்பதற்கான பெற்றோரின் பங்களிப்புக் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *