யாழில் மூன்றாம் கட்ட இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் திகதிகள் வெளியாகின

யாழில் மூன்றாம் கட்டமாக இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் எதிர்வரும் 09,10 மற்றும் 11 ஆம் திகதிகளில் வழங்கப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் மூன்றாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் கடந்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

முதலாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் பணிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.

யாழில் மூன்றாம் கட்ட இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் எதிர்வரும் 09,10 மற்றும் 11 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டவுள்ளன.

சிலவகை மருந்துகள், தடுப்பூசிகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள், ஆபத்திற்குரிய தொற்றா நோய் நிலைமையுடையவர்கள் அவசர சிகிச்சை பிரிவுகளுள்ள யாழ். போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் எதிர்வரும் 14 ஆம் திகதி இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என தெரிவித்தார்.

Leave a Reply