யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

<!–

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு! – Athavan News

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த தெல்லிப்பழையைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளது.


Leave a Reply