கொத்தலாவல சட்டத்தில் நான்கு திருத்தங்கள் – சுதந்திர கட்சியின் யோசனை ஜனாதிபதியிடம் !

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களை சுட்டிக்காட்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது.

சுதந்திரக் கட்சியினால் குறித்த சட்ட வரைபை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பிரிந்துரைகளே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் உள்வாங்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும் குறித்த கடிதத்தின் பிரதிகள் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply