நிலவும் சீரற்ற காலநிலை: யாழில் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு-மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சூறாவளியின் தாக்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்து நிலவிய கடும் காற்றுடனான சீரற்ற  காலநிலையின் காரணமாக தற்போது வரை 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனைத்து முகாமைத்துவ  பிரதிப் பணிப்பாளர் ரி .என் சூரியராஜ் தெரிவித்தார்

38 குடும்பங்களைச் சேர்ந்த142  பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2 சிறுதொழில் முயற்சியாளர்கள்பாதிக்கப்பட்டுள்ளது சண்டிலிப்பாயில்  ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம் உடுவில் பகுதியில் உள்ள புற்றுநோய் பராமரிப்பு நிலைய பெண்கள் விடுதியில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பாக நல்லூர் ,பருத்தித் துறை ஊர்காவற்துறை கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளது

 மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக நாளை வரை  எதிர்பார்க்கப்படுவதனால் பொதுமக்கள் தமக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *