எதிர்கட்சியினரின் அமளிக்கு மத்தியில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றம்!

கடும் அமளிக்கு மத்தியில் அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் சட்டமூலம் உள்ளிட்ட 3 சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் கூடிய நிலையில், எதிர்கட்சிகள் பெகாசஸ் உளவு விவகாரத்தை கூறி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக அவை நடவடிக்கைகள் அவ்வவ்போது ஒத்திவைக்கப்படுகிறது.

இதற்கிடையில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் உள்ள 41 ஆயுத தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து திவால் திருத்த சட்டமூலம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply