தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் வடபோர்முனை கட்டளைத் தளபதியுமான பிரிகேடியர் தீபன் மற்றும் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி கில்மன் ஆகியோரின் தந்தை கந்தையா வேலாயுதபிள்ளை தனது 85 ஆவது வயதில் நேற்று இரவு காலமானார்.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு இரண்டு பிள்ளைகளை உவந்தளித்த இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மாமானாரும் ஆவார்.

