
பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம்!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் 10.08.2021 திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகும்.
தினமும் காலை மாலை விஷேட பூசை இடம்பெறுவதுடன் 15.08.2021 வீரகம்பம் வெட்டுதல் வாழைக்காய் எழுந்தருளப்பண்ணுதலும் 17 ஆம் திகதி நோர்ப்பு கட்டுதல் மஹா யாகம் சக்தி பூசை இடம்பெற்று 18.08.2021 அதிகாலை பக்திப்பரவசமூட்டும் தீ மிதிப்பு வைபவம் இடம்பெறும்.
கொவிட் நிலைமையை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் உற்சவம் இடம்பெறும் என ஆலய நிருவாகத்தினர் தெரிவித்தனர்.