அதி வேகமாக பயணித்த நபருக்கு ஏற்பட்ட நிலை

வேகக்கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி,பெயர் பலகையுடன் மோதுண்டதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதுக்காட்டுச் சந்தி பகுதியில், இன்று புதன்கிழமை காலை, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று வேககட்டுப்பாட்டை இழந்து, வீதியின் அருகே உள்ள பெயர் பலகையில் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர், பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply