அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 போட்டியில் பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றி !

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான தொடர் தோல்வியை பங்களாதேஷ் அணி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

டாக்காவில் பகலிரவு ஆட்டமாக நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இதனை அடுத்து 132 என்ற வெற்றியிலக்கை நோக்கி அவுஸ்திரேலிய அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது

இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்று அவுஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஸ் அணி சார்பாக பந்துவீச்சில் அசத்திய நஸூம் அஹமட் தெரிவானார்.

Leave a Reply