மாகாணகல்வி…

மாகாணகல்வி பணிப்பாளருக்கு சொந்தவலயத்தில் பெருவரவேற்பு!

(வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாணத்திற்கான புதிய மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையேற்ற  திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களுக்கு  அவரது சொந்த வலயமான பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் வலய உத்தியோகத்தர்கள் நேற்றிரவு  வரவேற்றனர்.

திங்களன்று திருமலை சென்று கடமையை பொறுப்பேற்றகையோடு பட்டிருப்புக்கு திரும்பிய வேளை மாலை 7மணியளவில் இப்பெருவரவேற்பு நடைபெற்றது.

மேள வாத்தியம் முழங்க, வெடியோசை கேட்க, மாலையணிவித்து பொன்னாடைபோர்த்தி ,மாகாணக் கல்விப் பணிப்பாளர் வரவேற்கப்பட்டார்.
வலயத்தின் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தலைமையில்  வரவேற்பு நடைபெற்றது.

நிகழ்வில் மங்கள விளக்கேற்றப்பட்டு இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் மிகவும் கோலாகரமான முறையில் சுகாதார நடைமுறைளைப் பின்பற்றி நடைபெற்றது.
இந் நிகழ்வில் வலய உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *