வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரில் குவிக்கப்படும் இராணுவம் – அம்பிகா சற்குணநாதன்

போதைப்பொருள் தடுப்பு எனும் பெயரில் வடக்கு மாகாணத்தில்  இராணுவப் பிரசன்னம் அதிகரிக்கப்படுவதாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.அதிலும் வடக்கில் கூடுதலான  போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.போதைப்பொருள் விடயத்தை அரசு கையாள்வதில் குறைபாடுகள் உள்ளன.இதனை சாட்டாக வைத்து இராணுவ மயமாக்கல் வடக்கில் அதிகரித்துள்ளது.

வடக்குக்கு நீதி அமைச்சர் அண்மையில் வந்தார்.போதைப்பொருளை கட்டுப் படுத்துவோம் என்று கூறிவிட்டு  சென்றார்,இரண்டு நாட்களின் பின்னர் இராணுவ சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இடம் பெறப்  போகிறது என்றால்,இராணுவத்துக்கு தகவல் முற்காட்டியே கிடைக்கிறது.பின்னர் போராட்டக் காரர்களுக்கு அவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள். இந்த நிலமை தான் வடக்கில் உள்ளது.ஆனால் போதைப்பொருள் எப்படி இங்கே வருகிறது என்று இராணுவத்துக்கு தெரியவில்லையா?

போதைப்பொருள் பயன்பாட்டை சுகாதார பிரச்சினையாக பார்க்க வேண்டும்.ஆனால் போதைப்பொருள் கட்டுப்பாடு,மற்றும் சிகிச்சை வழங்கும் செயற்பாட்டுக்கு இராணுவத்தையே அரசு பயன்படுத்துகிறது.சுகாதார அமைச்சு,மருத்துவ நிபுணர்கள் இந்த சிகிச்சை முறைகளை கையாள வேண்டும்.

 நாட்டில் பல சட்டங்கள் உள்ளன .போதைப்பொருள் பயன்படுத்துபவர்களை குற்றவாளியாக பார்க்கும் சட்டம்,அவர்களை சிறைக்கு அனுப்பும் சட்டம் ஆகியன உள்ளன.ஆனால் இவற்றின் மூலம் போதைப்பொருளை கட்டுப் படுத்த முடியாது.அதே போன்று போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு நாம் உதவ முடியாது.ஆகவே மனித உரிமை மற்றும் சுகாதர அடிப்படையில் நோக்கினால் மட்டுமே இவர்களுக்கு நாம் உதவ முடியும்.என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *